“காதல் நிலாவே பூவே” காலை நடைப் பயணத்தில் இந்தப் பாடலை நினைப்பூட்டியது மனசு.
“மணிக்குயில்” படத்தில் உமா ரமணனுக்கு இரண்டு ஜோடிப் பாடல்கள்.
ஒன்று மனோவுடன்
“தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே”
https://youtu.be/6yAu8b0-ftM?si=Ts8pVDm2bEW09XBM
இன்னொன்று இந்த
“காதல் நிலாவே பூவே”
https://youtu.be/JD9_tg-bxYU?si=lNBcYc_dMjASyGu_
முன்னது ஜோடிப் பாடல் என்றாலும் உமா ரமணன் தனித்துக் களம் ஆடிக் கவர்வார்.
ஆனால் “காதல் நிலாவே பூவே” அப்படியல்ல.
அருண்மொழி & உமா ரமணன் சம விகிதத்தில் கலக்கியிருப்பார்கள்.
காரணம் இருவரின் குரலிலும் ஒரு ஏகாந்தத் தொனியும், மென்மையும் ஒட்டிய ஒரே அலைவரிசை.
உமா ரமணன் & அருண்மொழி பாடல் ஒன்றைக் கேட்டால் போதும் இவர்களின் கூட்டணியில் பழையதை எல்லாம் கிளறி விடும் மனசு.
ஆனாலும் இந்த மென்மைக்கு முரணாக
“வெள்ளையத் தேவன்” படத்தில் இடம்பிடித்த
“வானத்தில் இருந்து மண் மீது வந்தாள்”
https://youtu.be/gYYVP3X8o28?si=OW3kPpgQMei-spqo
வேக நடைக்கும் ஈடு கொடுத்திருப்பார்கள்.
ஆனாலும் என்னமோ இன்னும் மென்மை பூத்த பாடல்களைத் தோண்டிப் பார்த்தால் அழகழகாய் விரியும்
முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா (தந்து விட்டேன் என்னை)
https://youtu.be/NtcCbGQgYVc?si=4U1u6TAItLIeHPrc
ராஜா இல்லா ராணி என்றும் ராணி தான் (எதிர்க்காற்று)
https://youtu.be/mUzUcxszXB8?si=WRn2ZKFnLl7Jb97j
இது மானோடு மயிலாடும் காடு (எங்க தம்பி)
https://youtu.be/_XWnKlq95XY?si=Wu686nuaKUhG8-g2
இந்தப் பாடல்களையெல்லாம் ஒரு சுற்று தரிசித்தால், “வானத்தில் இருந்து” பாடலைத் தவிர்த்து மீதி எல்லாம் இவர்களை மட்டும் முன்னுறுத்தி, இசைக் கோவையில் அதீத ஜாலம் காட்டாமல் தெளிந்த நீரோடை போல விட்டு விடுவார் ராஜா. அதில் மிதந்து போகும் சருகு போலக் குரல்கள்.
எப்படி எண்பதுகளில் உமா ரமணன் & தீபன் சக்ரவர்த்தி குட்டி ராஜ்ஜியம் இருந்ததோ அது போலத் தொண்ணூறுகளில் உமா ரமணன் & அருண்மொழியின் கூட்டு ராஜ்ஜியம் இதம் இதம்
ஒரு தேசம் உண்டு எனக்கு
இது எனக்குப் போதுமே
ஒரு நேசம் உண்டு உனக்கு
அது உனக்குப் போதுமே
ராஜா இல்லா ராணி
என்றும் ராணி தான்.....ஹோ
ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான் ❤️
கானா பிரபா
19.12.2024